Enable Javscript for better performance
மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

    By DIN  |   Published on : 06th April 2018 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருள்மிகு ஆனந்த விநாயகர் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
     மன்னார்குடி ஒத்தைதெருவில் உள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் கோயில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமானதாகும். இக்கோயில்  அன்னதானத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டதையடுத்து அன்னதானம் கூடம் புதிதாக கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெற்றது. 
     சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம்,  இந்த அன்னதானக் கூடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார். அதேநேரத்தில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றினார். மேலும், அன்னதானக் கூடத்தில் உணவு பரிமாறினார்.
    இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, வட்டாட்சியர் ஸ்ரீதேவி சிவானந்தம், நகராட்சி ஆணையர் ஜி. இளங்கோவன், அறநிலையத் துறை உதவி ஆணையர் எஸ். கிருஷ்ணன், இணை ஆணையர் கே. தென்னரசு, செயல் அலுவலர் சிவகுமார், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி. குமார், கோட்டூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வீ. ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பொன். வாசுகிராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai