Enable Javscript for better performance
மன்னார்குடி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
     பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  24-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து, 12 நாள் நடைபெறும் விடையாற்றி விழா மார்ச் 25-ஆம் தேதி தொடங்கி, இதன் நிறைவு நிகழ்ச்சியாக கிருஷ்ணதீர்த்த தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கிருஷ்ணதீர்த்த தெப்பக்குளத்தில், தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. தெப்பத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி,  மூன்றுமுறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாட்டினை,கோயில் உதவி ஆணையர் சி.கிருஷ்ணன்,நிர்வாக அலுவலர் ரா.சுகுமார்,உபயதாரர் பெங்களூர் ஸ்ரீநிவாஸ் ராகவன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai