Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் அறிவுத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு இடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அறிவுத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, வகுப்பறைகளில் பல்வேறு தலைவர்களின் வரலாற்றுக் கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
    இந்த அறிவுத் திருவிழா புத்தக இயக்கத்தைக் கல்வியாளர் எம். நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், கீரங்குடி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சுகந்தி, கூத்தாநல்லூர் நூலகர் செல்வகுமார், செங்காந்தாள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமின்றி, மணக்கால் அரசுப் பள்ளி, அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai