Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
    திருவாரூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் மற்றும் திருவாரூர் நகர ஆபரண தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில துணைச் செயலர் டி. முருகதாஸ், மாவட்டத் தலைவர் கே.பி. இராஜமாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். 
    இதில், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலர் தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    காவிரி படுகைவாழ் மக்கள் கூட்டமைப்பு: இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே காவிரி படுகைவாழ் மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை வகித்தார். 
    இதில் நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமை மீட்புக்குழு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முன்னதாக இவர்கள் பழைய ரயில் நிலையத்திலிருந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai