Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: கட்டடப் பொறியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: கட்டடப் பொறியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 07th April 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கட்டடப் பொறியாளர் சங்கம் சார்பில், மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதில், சங்கத் தலைவர் தே. அழகானந்தம் தலைமை வகித்தார். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் எஸ். காமராஜ், விவசாயச் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், திராவிடர் கழக பேச்சாளர் ராம. அன்பழகன், தஞ்சை வழக்குரைஞர் அ. நல்லதுரை, பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் என். சையதுசாகிர், மாநில மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். பாலமுருகன், அறக்கட்டளைத் தலைவர் ஜோ.ஜான்கென்னடி ஆகியோர் பேசினர்.
    வர்த்தகர் சங்கத் தலைவர் பாரதிஜீவா, வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர். சரவணச்செல்வன், இந்திய மருத்துவக் கழக மன்னார்குடி கிளைச் செயலர் வீ. காரிமுத்து, டெல்டா இணையதள நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் டி. ஜீவானந்தம், ரோட்டரி சங்கத் தலைவர் கே. ரத்தினசபாபதி, கட்டடப் பொறியாளர் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினர் பி. சூரியபிரகாஷ், கிளைச் செயலர் டி. ஜான்பிரட்ரிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகி குபேந்திரன், பொறியாளர் சங்க கௌரவத் தலைவர் ஆர். மோகன்ராஜ் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai