Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: வேளாண்குடி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: வேளாண்குடி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 07th April 2018 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, குடவாசல் பேருந்து நிலையம் எதிரே காவிரி படுகை வேளாண்குடி மக்கள் இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஆர்ப்பாட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான உரிமையைப் பெற்றுத் தராத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிடப்பட்டது. மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும். காவிரி படுகைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    இதில், காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் வரதராஜன், தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த சபெசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai