Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 07th April 2018 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அலுவலர்களாக பணியாற்றுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். 
    கூட்டுறவு சங்கத் தேர்தலில் அலுவலர்களாகப் பணிபுரிவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உரிய விதிமுறைகளை பின்பற்றி கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai