Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல்: உண்ணாவிரதம் மேற்கொண்ட 12 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கத் தேர்தல்: உண்ணாவிரதம் மேற்கொண்ட 12 பேர் கைது

    By DIN  |   Published on : 07th April 2018 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, அமமுக கட்சியினர் உள்ளிட்ட 12 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில், திமுக சார்பில் 17 பேர், அதிமுக சார்பில் 11 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 11 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டு, அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதைக் கண்டித்து கடந்த 2- ஆம் தேதி முதல்,  திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஐ.வி. குமரேசன் தலைமையில் தொடர்  உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
    இந்நிலையில், கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார், வெள்ளிக்கிழமை நிகழ்விடத்துக்குச் சென்று, தொடர்  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டதை கைவிட மறுத்ததால் ஐ.வி. குமரேசன் மற்றும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் எஸ். கண்ணன், ஊராட்சி செயலாளர் பிரகாசம், அம்மா மக்கள் முன்னேற்றக்  கழக ஒன்றிய விவசாய அணியைச் சேர்ந்த சி. முருகேசன், ஊராட்சி செயலாளர் கலியபெருமாள், சந்திரன் உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai