Enable Javscript for better performance
கோவைக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் அரவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை ஆயிரம் டன் சன்னரக நெல் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றி கோவைக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai