Enable Javscript for better performance
சந்தானராமர் கோயிலில் விடையாற்றி விழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி பிரமோத்ஸவம் விடையாற்றியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது. 
    இக்கோயில் ஸ்ரீராமநவமி விழா கடந்த மார்ச் 25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி, நாள்தோறும் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கும் பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் , அலங்காரம், சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற விடையாற்றி விழாவில், சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai