Enable Javscript for better performance
மகாமாரியம்மன் கோயிலில் நாளை கடை ஞாயிறு விழா- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கடை ஞாயிறு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.8) தேதி நடைபெறுகிறது.
    இக்கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மகா மாரியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு இரவு அம்மன் வீதியுலாவும் அதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான பாடைக்காவடித் திருவிழா, புஷ்ப பல்லக்கு விழாவும் நடைபெற்றது. பங்குனிப் பெருந்திருவிழாவின் கடைஞாயிறு விழா ஏப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்தும், பால்குடம் எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai