Enable Javscript for better performance
வருமான வரித் துறை அலுவலகம் முற்றுகை: 60 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 60 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருமான வரித் துறை அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால், திருவாரூரில் நாகை சாலையில் உள்ள வருமான வரித் துறை அலுவலகம் முன்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இந்நிலையில், திருவாரூர் அருகேயுள்ள வாளவாய்க்கால் ரவுண்டானாவிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அதன் மாவட்டச் செயலர் கணேஷ் பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். 
    கோஷங்களை எழுப்பியபடி வந்த போராட்டக் குழுவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் தடுப்புகளை மீறி வருமான வரித் துறை அலுவலகத்துக்குள் நுழையும் வகையில் வேகமாக தடுப்புகளை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். எனினும், போலீஸார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.  பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai