Enable Javscript for better performance
விபத்தில் ஊராட்சி முன்னாள் தலைவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை டிராக்டர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஊராட்சி முன்னாள் தலைவர் உயிரிழந்தார். 
    நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள காடந்தேத்தியைச் சேர்ந்தவர் அம்பிகாபதி (57). ஊராட்சி முன்னாள் தலைவரான இவர் இருசக்கர வாகனத்தில் உறவினர் சுந்தரையா என்பவருடன் தொழுதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி அரசுக் கல்லூரி அருகே திரும்பி வந்து கொண்டிருந்த போது அவ்வழியே வந்த டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அம்பிகாபதி மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த சுந்தரையா திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai