Enable Javscript for better performance
கார் மோதி விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள இளவரசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகூரான் (50) . விவசாயியான இவர், இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டிக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தார். கரும்பியூர் அருகே சென்றபோது, திருவாரூர் நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நாகூரான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலிவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி கார் ஓட்டுநரான மன்னார்குடியைச் சேர்ந்த சத்தியசீலனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai