Enable Javscript for better performance
காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், திருத்துறைப்பூண்டி அருகே காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒன்றிய அமைப்பாளர் ஆர். கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் தை. ஜெயபால் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பழனிகுமார், சிவவடிவேல் உள்பட 25 பேர் பங்கேற்றனர். இவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்த மறியலால், சென்னை- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai