Enable Javscript for better performance
சவ ஊர்வலத்தில் வெடி விபத்து: பொறியியல் பட்டதாரி பலி- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டியில் சவ ஊர்வலத்தில் வாணவெடி வெடித்தபோது தீப்பொறி பற்றி, அருகில் இருந்த வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், கடல்சார் பொறியியல் பட்டதாரி உயிரிழந்தார்.
    திருத்துறைப்பூண்டி அரியலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மாரியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது, வாணவெடி வெடித்ததில் தீப்பொறி ஏற்பட்டு, பவுன்தாஸ் என்பவரின் கூரை வீட்டில் தீப்பிடித்தது.
    இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், அதில் இருந்த ரெகுலேட்டர் சவ ஊர்வலத்தில் பங்கேற்ற கடல்சார் பொறியியல் பட்டாதரி திலீப் (23) தலையில் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
    அதிர்ச்சியில் மயங்கிய அவரது தந்தை திருச்செல்வம் மற்றும் முருகப்பாண்டி, சிவானந்தம் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai