Enable Javscript for better performance
திருவாரூரில் முற்றுகைப் போராட்டம்: 37 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 6 வார காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    அதன் தொடர்ச்சியாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    போராட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் முரளி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், ஆசாத், ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர்கள் (பட்டுக்கோட்டை) மாரிமுத்து, (தஞ்சை) தேவா, (நாகை) ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
    இதேபோல், இந்திய ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் அதன் மண்டல அமைப்பாளர் சிவராமன் தலைமையில் திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆர்ப்பாட்டம்...
    இதேபோல், திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தனியார் பள்ளிகள் நலச் சங்கம் சார்பில், அதன் தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
    நடைபெற்றது.
    காவிரி மீட்புக் குழுவினர்30 பேர் கைது...
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் காவிரி மீட்பு குழுவினர் சார்பில் ஓடம்போக்கி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 30 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    இதேபோல், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி அனைத்து ஆசிரியர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai