Enable Javscript for better performance
திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தமிழ்ச் செம்மல் விருது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தமிழ்ச் செம்மல் விருது

    By DIN  |   Published on : 08th April 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 90 தமிழறிஞர்களுக்கு தமிழக அரசால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2017-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.
    விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலம் பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, சுரதா விருது, அவ்வைக் கோட்ட விருது, கண்ணதாசன் கவிக்குயில் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
    மயக்கும் மருத்துவரின் மயக்கும் கவிதைகள், மயில்வாகனன் சரிதம் என்ற கவிதை நூல்களையும், மருத்துவ முன்னோடிகள் என்ற மருத்துவ தமிழ் நூலையும், கண்ணதாசன் கவிநயம் என்ற குறுந்தகட்டையும் வெளியிட்டுள்ளார். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு தமிழ் சங்கங்களிலும் தமிழ் இலக்கிய உரைகள் நிகழ்த்தியுள்ளார். கவியரசு கண்ணதாசன் பேரவை என்ற அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ள இவர் ஆண்டுக்கு 2 முறை இலக்கிய விழாக்கள் என 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
    இவரின் தமிழ் தொண்டைப் பாராட்டி, தமிழக அரசு வழங்கிய தமிழ் செம்மல் விருதில் சான்றிதழும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai