Enable Javscript for better performance
போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 08th April 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சங்கத் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். நாகை மண்டல பொதுச் செயலாளர் ந. பன்னீர்செல்வம், சம்மேளன பொதுச் செயலாளர் ஜி. வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மண்டல அமைப்புச் செயலாளர் வி. ராஜேந்திரன் வரவேற்றார்.
    தீர்மானங்கள்: கூட்டுறவு சங்கத் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கம் போட்டியிடுவது. தேர்தலை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த வலியுறுத்துவது. 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, அனைத்து தொழிற்சங்கத்தையும் அழைத்துப் பேசி 2.57 காரணி ஊதிய உயர்வை அமுல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவது. பொறையாறு கிளையில் பணியாளர்கள் ஓய்வறைக் கட்ட வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    மாநிலத் துணைத் தலைவர் டி.எஸ்.ஆர்.எம். சுப்ரமணியஐயர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி. கணேசன், திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.சி. பாலு, நகரச் செயலாளர் எம். கல்வி பிரியன், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் சுப. சேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர். மதியழகன் நன்றி கூறினார் .

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai