Enable Javscript for better performance
ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் ஒன்றியம், புள்ளவராயன்குடிகாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    விழாவுக்கு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சோ. செல்வம் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ந. சம்பத், பெற்றோர் சங்கத் தலைவர் பி. பாண்டியன், தொடக்க வேளாண்மை வங்கித் தலைவர் சு. சமயமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பொன்மலர் சரவணமூர்த்தி தலைமையில், பெற்றோர் சங்கத் தலைவர் க. கலியமூர்த்தி தேசியக்கொடி ஏற்றினார்.
    விளையாட்டுப் போட்டியை மகாத்மா காந்தி நற்பணி இயக்கத் தலைவர் மு. பாலசௌந்தரம், முன்னாள் தலைவர் நல்லதம்பி, பெற்றோர் சங்க முன்னாள் பொருளாளர் க. சிவானந்தம், கல்விப் புரவலர் ரா. அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர். மணிவண்ணன் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கானப் பரிசுகளை திருச்சி அன்பு புதியவன் வழங்கினார். முதலாம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம், நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறளை ஒப்பித்தார்.
    விழாவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வுப் பிரிவு செயலர் மதிவாணன், ஆசிரியர்கள் ப. ராமமூர்த்தி, ரா. கணபதி, மா. தியாகராஜன், அ. மாரிமுத்து, ஜூலியஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    பள்ளித் தலைமையாசிரியர் அருள் வரவேற்றார். ஆசிரியை பா. பிரபாவதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை ச. கமலா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai