Enable Javscript for better performance
கார் மோதி மாட்டு வியாபாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சனிக்கிழமை மாட்டுடன் வந்த வியாபாரி கார் மோதி உயிரிழந்தார்.
    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கருவேப்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (55). மாட்டு வியாபாரி.  இவர், கிழக்கு கடற்கரை சாலையில் மாட்டைஓட்டிக்கொண்டு நடந்துவந்தபோது, வேளாங்கண்ணியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
    இந்த விபத்து தொடர்பாக, எடையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிவந்த மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜோசப் மகன் செபஸ்டின் வினோத்ராஜை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai