Enable Javscript for better performance
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும்'- Dinamani

சுடச்சுட

    

    "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும்'

    By DIN  |   Published on : 09th April 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் கூறினார். 
    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ரா. ரவி தலைமை வகித்தார்.
    இதுகுறித்து ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக வளங்களைச் சுரண்டும் வகையில், அதற்கு இடையூறாக உள்ள விவசாயத்தை அழித்துப் பாலைவனமாக்கவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஆசிரியர்கள், விவசாயிகள் தொடர்ந்து போராடுவர் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai