Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, இணையதள நண்பர்கள் சார்பில் ஊர்வலம், ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்  ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    பேரணிக்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமை வகித்தார். இதில் ராஜ. ராஜசேகர், மன்னை ராம், பரவை சுரேஷ், செந்தில் பக்கிரிசாமி உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டோர்
    பங்கேற்றனர்.
    பேரணியானது தேரடியிலிருந்து புறப்பட்டு மேலராஜவீதி, பெரிய கடைத்தெரு, காந்திஜி சாலை, வஉசி சாலை, 3 -ஆம் தெரு, புதுத்தெரு, கீழப்பாலம் வழியாக பாமணி ஆற்றை அடைந்தது. பின்னர், பேரணியாக வந்தவர்கள் பாமணி ஆற்றில் இறங்கி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai