Enable Javscript for better performance
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே கிணற்றில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி, தனியார் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    பட்டுக்கோட்டை அருகேயுள்ள புதுக்கோட்டை உளூரைச் சேர்ந்த சாமிவேல் மகன் ஹரீஷ் (19). இவர், மன்னார்குடி அருகேயுள்ள இடையர்நத்தம் தனியார் தொழிற்கல்லூரியில், விடுதியில் தங்கி, கட்டடவியல் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
    இந்நிலையில், கல்லூரிக்கு அருகேயுள்ள தர்மராஜ் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற ஹரீஷ் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தாராம்.  உடன் வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
    இதையடுத்து, மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், கிணற்றில் நீண்ட நேரம் தேடிய பின், ஹரீஷ் சடலமாக மீட்கப்பட்டார். திருமக்கோட்டை போலீஸார், ஹரீஷ் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai