Enable Javscript for better performance
கிராம ஊராட்சிப் பணியாளர்கள் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சிப் பணியாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி) கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில், சங்க நிர்வாகி ராஜலெட்சுமி இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ. தங்கவேல், நிர்வாகிகள் ஜி. ரவி, செல்வராஜ், ராஜகோபால், வள்ளி, மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளத்தை வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியச் செயலாளர் ஏ. ரமேஷ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai