Enable Javscript for better performance
குளத்தில் மூழ்கி இளம் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண் குளத்தில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
    தேனி மாவட்டம்,  பெரியகுளத்தைச் சேர்ந்த முருகன் மகள் திவ்யபாரதி (21). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துவந்தபோது,  திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பிரவீண்ராஜ் (24) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
    இதனால், பிரவீண்ராஜுடன் திருத்துறைப்பூண்டிக்கு வந்த திவ்யபாரதி, மேலநரிக்குடியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அருகில் உள்ள குளத்துக்கு சனிக்கிழமை குளிக்கச் சென்ற திவ்யபாரதி எதிர்பாராதவிதமாக  நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai