Enable Javscript for better performance
குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கதை பேசலாம் வாங்க என்னும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
     நிகழ்ச்சியை நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
    நிகழ்ச்சியில் நூலகர்கள் த. செல்வகுமார், ஆசைத்தம்பி ஆகியோர் பங்கேற்று பேசுகையில், கதை கேட்பதன் மூலம் கடந்த கால நிகழ்வுகளை மனக்கண்ணால் உணர்ந்து கொள்ளலாம் என்றும் எதிர்காலத்தில் நன்மை, தீமைகளைப் பிரித்து பார்க்க உதவுவதால், அனைத்து குழந்தைகளும் கதைகள் படிப்பதுடன்,  பெற்றோர்களிடமும் பெரியோர்களிடமும் கதை சொல்ல வற்புறுத்த வேண்டும் என்றனர். 
    நிகழ்ச்சியில் படித்த கதைகளை அழகாய் விளக்கிக் குழந்தைகள் பேசினர். சிறப்பாக கதைகள் சொன்ன குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மைய நூலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai