Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு:  உண்ணாவிரதம் மேற்கொண்ட மேலும் 10 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு:  உண்ணாவிரதம் மேற்கொண்ட மேலும் 10 பேர் கைது

    By DIN  |   Published on : 09th April 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, மேலும் 10 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் திருராமேஸ்வரம், வடகோவனூர், தென்கோவனூர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 2-ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இவர்களில் 12 பேர் கடந்த வெள்ளிக்கிழமையும் (ஏப்.6), 10 பேர் சனிக்கிழமையும் கைது செய்யப்பட்டனர். 
    இந்நிலையில், வடகோவனூர் ஊராட்சி  திமுக அவைத் தலைவர் வி. ஜெகந்நாதன் தலைமையில் தொடர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 10  பேரை, கூத்தாநல்லூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai