Enable Javscript for better performance
கூட்டுறவு சங்க 2-ஆம் கட்டத் தேர்தலில் முறைகேடு புகார்: நீதிமன்றத்தை அணுக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்க 2-ஆம் கட்டத் தேர்தலில் முறைகேடு புகார்: நீதிமன்றத்தை அணுக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முடிவு

    By DIN  |   Published on : 09th April 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு சங்கத் தேர்தலில் 2-ஆம் கட்ட மனுத் தாக்கலின்போதும் முறைகேடு நடந்துள்ளது என்றும், இதுகுறித்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, அதன் மாவட்டச் செயலர் பெ.இரா. ரவி  திருவாரூரில் சனிக்கிழமை கூறியது:
    ஆசிரியர்- அரசு அலுவலர் சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் கடந்த மாதம் 24 -ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் ஆசிரியர் மன்றம் சார்பில் 22 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம்.  27-ஆம் தேதி மனுவை பரிசீலனை செய்யாமல், தேர்தல் அலுவலர் காலம் தாழ்த்தியதால் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மறுநாள் எங்கள் வேட்பு மனுக்கள் ஏற்கப்படாமல், மாற்றுச் சங்கத்தை சேர்ந்த 11 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இதை எதிர்த்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்துக்கு சென்றோம்.  நீதிமன்றத்தில் எங்கள் மனு ஏற்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு 5 சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலிலும் கோட்டூர், நீடாமங்கலம் ஆகியப் பகுதிகளில் 11 பேர் தேர்வு என முறைகேடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளோம். உயர் நீதிமன்றத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். தமிழக அரசானது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் அரசியல் பாரபட்சம் காட்டாமல் 3 மற்றும் 4-ஆம் கட்ட தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai