Enable Javscript for better performance
திருவாரூரில் இன்று சமரச விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் சமரச முறையில் தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை (ஏப். 9) நடைபெறுகிறது.
    இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி தெரிவித்தது: திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுமுறை தீர்வு மையத்தில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், சமரச  நடுவர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இதில் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் பங்கேற்று பயனடையலாம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai