Enable Javscript for better performance
நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நிறுவனத் தலைவர் எஸ். கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காலதாமதம் இன்றி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இப்பிரச்னையை அரசியல் ஆக்காமல் தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்னை என்பதை உணர்ந்து அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் போராட வேண்டும், அதுபோன்ற போராட்டங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவிக்கும். மன்னார்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளைக் கண்டறிந்து, அதை கைப்பற்றி முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் பொதுச் செயலர் சா. சம்பத், நிர்வாகிகள் ச. நவநீதம், டி. தான்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai