Enable Javscript for better performance
பள்ளி 70-ஆவது ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி விக்டரி உதவிபெறும் தொடக்கப்பள்ளியின் 70-ஆவது ஆண்டு விழா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன்  தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் து. முத்தமிழன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இன்பவேணி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் ஏ.ஆர்.வி. நிறுவனங்களின் உரிமையாளர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் முருகேசன் மற்றும் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், கல்விப் புரவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் சீதா வரவேற்றார். நிகழ்ச்சியைப் பெற்றோர்- ஆசிரியர் கழகத்தலைவர் சரவணன் தொகுத்து வழங்கினார்.
    கலை நிகழ்ச்சிகளை ஆசிரியை ஸ்ரீமதி ஒருங்கிணைத்தார். சென்சாய் முருகேசன் மற்றும் சென்சாய் கார்த்திக்ராஜா ஆகியோர் கராத்தே பயிற்சியளித்தனர். ஆசிரியை திலகவதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளித் தாளாளர் அய்யாதுரை செய்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai