Enable Javscript for better performance
பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றக் கோரி நூதனப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றக் கோரி நூதனப் போராட்டம்

    By DIN  |   Published on : 09th April 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோபாலசமுத்திரம் கிராமத்தில் ஐயனார் கோவில் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பாலம் இறக்கத்திலிருந்து உப்பூர் செல்லும் சாலையோரம் ஏராளமான மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த ஆபத்தான மின் கம்பங்களை மாற்றித் தர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    இதைத்தொடர்ந்து, புதிய உதயம் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் பழனிதுரை, செயலாளர் ஆனந்த், பொருளாளர் முருகானந்தம், கெளரவத் தலைவர் வெங்கட் ஆகியோர் தலைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சனிக்கிழமை பழுதடைந்த மின் கம்பத்துக்கு மாலை அணிவித்து, ஊதுவத்தி ஏற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai