Enable Javscript for better performance
"பூட்டிக் கிடக்கும் ஏடிஎம்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி ஏப். 21 -இல் ஆர்ப்பாட்டம்'- Dinamani

சுடச்சுட

    

    "பூட்டிக் கிடக்கும் ஏடிஎம்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி ஏப். 21 -இல் ஆர்ப்பாட்டம்'

    By DIN  |   Published on : 09th April 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் பகுதியில் பூட்டியே கிடக்கும் ஏடிஎம்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி  ஏப். 21 -இல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத் தலைவரும், வங்கி வாடிக்கையாளர் கூட்டமைப்புச் செயலருமான ஆர். தெட்சிணாமூர்த்தி  வெளியிட்ட  அறிக்கை:
    திருவாரூர் பகுதியில் உள்ள ஒரு சில தனியார் வங்கிகளின் ஏடிஎம்களைத் தவிர, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும்  பல தனியார் வங்கிகளின் ஏடிஎம்கள் பெரும்பாலான நாள்களில் பூட்டியே கிடக்கின்றன.
    வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் வங்கிகள் காட்டும் ஆர்வம்,  வாடிக்கையாளர்களுக்கான  நலன்களைப்  பேணுவதில்  இருப்பதாக  தெரிவதில்லை.
    சில தனியார் வங்கிகளின் ஏடிஎம்கள்  எந்தநேரமும் செயல்படும்போது, சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம்கள் பெரும்பாலான நாள்கள் செயல்படுவதில்லை. இதுகுறித்து வங்கி நிர்வாகம் தரப்பில் விசாரித்தபோது, ரிசர்வ் வங்கி சரியான முறையில் பணம் அனுப்புவதில்லை. அதனால் ஏ.டி.எம். இயந்திரங்களில் போதுமான பணம் வைக்க முடியவில்லை எனவும், தினசரி வங்கி கிளைகளில் வசூலாகும் பணத்தைக் கொண்டே  பணப் பரிவர்த்தனைகளை சிரமத்துடன் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
    ரிசர்வ் வங்கி முறையாக பணம் அனுப்புவதை நிறுத்தியதைப் பார்க்கும்போது, டிஜிட்டல் முறை வணிகத்தில் சற்றும் பழக்கம் இல்லாத கிராமப்புற விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை டிஜிட்டல் முறைக்கு மறைமுகமாக தினிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
    பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படாத காரணத்தால் ஆண்டு முழுவதும் சிரமப்பட்டு விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைப் போட்டு பணம் எடுக்க விரும்பும் விவசாயிகள், ஓய்வூதியம் எடுக்க விரும்பும் ஓய்வூதியர்கள், நோயாளிகளின் செலவுக்குப் பணம் எடுக்க விரும்பும் உறவினர்கள், கல்வி செலவுக்குப் பணம் எடுக்க விரும்பும் மாணவர்கள், வியாபார நிமித்தமாக பணப் பரிவர்த்தனை செய்யும் வியாபாரிகள், ஊதியம் எடுக்கும் ஊழியர்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.
    எனவே, ஏடிஎம்கள் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரி  திருவாரூரில் ஏப். 21 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai