Enable Javscript for better performance
மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளிக்கு தொலைக்காட்சிப் பெட்டி- Dinamani

சுடச்சுட

    

    மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளிக்கு தொலைக்காட்சிப் பெட்டி

    By DIN  |   Published on : 09th April 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் வட்டம், குடிதாங்கிச்சேரி, மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளிக்கு அன்பளிப்பாக தொலைக்காட்சிப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
    மன்னார்குடி தரணி ரெடிமிக்ஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் செல்வம், கடந்த 10 நாள்களுக்கு முன்பு இறந்தார். அவரது நினைவாக, அவரது தங்கை சுமதி பாண்டியன், சகோதரர் சுதாகர் உள்ளிட்டோர் ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள புதிய தொலைக்காட்சிப் பெட்டியை மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனர் பி. முருகையனிடம் வழங்கினர்.
    இதுகுறித்து நிறுவனர் பி. முருகையன் கூறியது : மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில்  மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர், வடபாதிமங்கலம், சீர்காழி, சேகரை, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி  உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், 65 மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளைப் பராமரித்து வருகிறோம். இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சிப் பெட்டி, இந்தக் குழந்தைகளுக்கு ஒரு  மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும், இதன்மூலம், அவர்களுக்கு புதிய பயிற்சியையும் கற்பிக்க உதவியாக இருக்கும் என்றார். மகேஸ்வரி முருகையன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai