Enable Javscript for better performance
மன்னார்குடியில் உலக சுகாதார தினம்- Dinamani

சுடச்சுட

    

    உலக சுகாதாரத் தினத்தையொட்டி, ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், சர்க்கரை நோய் கண்டறியும் இலவச ரத்தப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    கீழராஜவீதி குட்டக்கரை நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,அமைப்பின் தலைவர்  அஞ்சறைப்பெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார்.
    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன் கலந்துகொண்டு, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள் ராஜமோகன், காந்திமதி ஆகியோர் சர்க்கரை நோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் பேசினர்.
     ஆய்வக நுட்புனர் மகேஷ்குமார் தலைமையில், 123 பயனாளிகளிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
    நிகழ்ச்சியில், முன்னாள் அஞ்சல்துறை அலுவலர் குப்புசாமி,  அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஜி. செல்வகுமார், எஸ். ராஜகோபாலன், எஸ். கமலப்பன், செயலர் எம்.வி. முத்தமிழ்ச்செல்வன், மகளிர் பிரிவு நிர்வாகி துர்காதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai