Enable Javscript for better performance
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர ஏப். 20 -க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ஆட்சி- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர ஏப். 20 -க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 09th April 2018 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர ஏப். 20 -க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ்  பள்ளிகளில் பயிலும் மாணவ,  மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி,  தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் சிறப்பாகச்  செயல்பட்டு வருகின்றன.
    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி, மதுரை,  திருச்சி,  திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர்,  கடலூர்,  தஞ்சாவூர், அரியலூர்,  தூத்துக்குடி,   சிவகங்கை,  தேனி,  ராமநாதபுரம்,  உதகமண்டலம், விழுப்புரம்,  என்.எல்.சி. பள்ளி - நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி -புதூர் - சென்னை,  செல்வம் மேல்நிலைப்பள்ளி - நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
    மாணவியருக்கான விளையாட்டு விடுதி, ஈரோடு,  திருவண்ணாமலை,  நாமக்கல்,  திண்டுக்கல்,  நாகர்கோவில்,  பெரம்பலூர்,  தேனி,  புதுக்கோட்டை,  தருமபுரி,  நேரு உள் விளையாட்டரங்கம் - சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
    இந்த  விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்கும் வகையில்  7,  8,  9 மற்றும் 11 -ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே. 2 முதல் 4 வரை நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் போட்டிகள்...
    தடகளம்,  இறகுப்பந்து,  கூடைப்பந்து, குத்துச்சண்டை,  கிரிக்கெட்,  கால்பந்து, வாள்சண்டை,  ஜிம்னாஸ்டிக்,  கைப்பந்து,  ஹாக்கி,  நீச்சல்,  டேக்வாண்டோ,   வாலிபால்,  பளுதூக்குதல்,  கபடி, மேசைப்பந்து, டென்னிஸ்,  ஜூடோ,  ஸ்குவாஷ்,  வில்வித்தை. 

    மாணவியருக்கு தேர்வு நடைபெறும் போட்டிகள்...
    தடகளம்,  இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை,  கால்பந்து,  வாள்சண்டை,  கைப்பந்து, ஹாக்கி,  நீச்சல்,  டேக்வாண்டோ,  வாலிபால் , பளுதூக்குதல்,  கபாடி, டென்னிஸ்,  ஜூடோ,  ஸ்குவாஷ்.
    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ,  மாணவியர் 2018 -19 -ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய விண்ணப்பப் படிவத்தை திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
    மாவட்ட,  மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதி தொடர்பான விவரங்களை w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் ஏப். 20 - க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-227158 -இல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai