Enable Javscript for better performance
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 09th April 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006 -ஆம் ஆண்டு முதல்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.
    2013 -ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள்  பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9 -ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ. 200,  பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300,  மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 600 என வழங்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச்  சேர்ந்தவராயின் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினராயின் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 50,000 -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    மாற்றுத் திறனாளிகளுக்கு, பள்ளி இறுதி வகுப்புவ ரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600,  மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750,  பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 1000,  உதவித் தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவு செய்து 2018 -ஆம் ஆண்டு மார்ச் 31 -ஆம் தேதி ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பும் ஏதுமில்லை.
    உதவித் தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.
    தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று,  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் மே 31 -ஆம் தேதிக்குள்   அலுவலக வேலைநாளில் ஆர்.வி.எல். நகர், மன்னார்குடி சாலை, விளமல், கூட்டுறவு நகர் பேருந்து நிறுத்தம், திருவாரூர் என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
    உதவித்தொகை பெற்று வருவோரின் கவனத்துக்கு...
    மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து தவறாது நேரில் வந்து அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai