Enable Javscript for better performance
ஆசிரியர்களுக்கு மடிப்பு நுண்நோக்கி பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான மடிப்பு நுண்நோக்கி பயிற்சி முகாம் மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் த. பெருமாள்ராஜ் தலைமை வகித்தார்.
    சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் கலந்துகொண்டு, பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
    மடிப்பு நுண்நோக்கி பயன்படுத்தும் முறை குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் மாநில கருத்தாளார் மொ. பாண்டியராஜன் பயிற்சியும், விளக்கமும் அளித்தார்.
    இதில் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளிலிருந்து 25 ஆசிரியர்கள் கலந்துகொண்டு, பயிற்சி பெற்றனர்.
    அமைப்பின் மாவட்டச் செயலர் யு.எஸ். பொன்முடி, 20 ஆசிரியர்களுக்கு மடிப்பு நுண்நோக்கியை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர்கள் தை. புகழேந்தி, ப. ரமேஷ், மாவட்ட இணைச் செயலர் ஷேக் இம்ரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வ. சேதுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai