Enable Javscript for better performance
உமறுப்புலவர் விருது பெற்ற புலவருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் உமறுப்புலவர் விருது பெற்ற நாச்சிக்குளத்தைச் சேர்ந்த ஹாஜி எம். முகமது யூசுப்புக்கு தமிழ் இலக்கிய மன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனர். 
    திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நாச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த புலவர் நாச்சிக்குளத்தார் என்கிற ஹாஜி எம்.முகமது யூசூப்பு. இவர் ஏராளமான கவிதை நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இவருக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் பல விருதுகள் வழங்கி கெளரவித்துள்ள நிலையில், சென்னையில் ஏப்.5-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில், புலவர் ஹாஜி எம். முகமது யூசூப்புக்கு "உமறுப்புலவர்' விருதும், ஒரு லட்சத்துக்கான காசோலையும், ஒரு சவரன் தங்க பதக்கத்தை யும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.  
    இதையடுத்து,  தமிழக அரசு விருது பெற்ற புலவர் ஹாஜி எம். முகமது யூசூப்புக்கு முத்துப்பேட்டை தமிழ் இலக்கிய மன்றம் சார்பில்,  மன்றச் செயலர் ராஜ்மோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் கோவி. ரெங்கசாமி, வெற்றித் தமிழர் பேரவை தலைவர் சுப. சிதம்பரம் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai