Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    நீடாமங்கலத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க கிளைத் தலைவர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சு. அம்பிகாபதி, கிளை கௌரவத் தலைவர் கி. சேதுரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பி. ரெத்தினம் வரவேற்றார். செயலாளர் வீ. தமிழ்மணி வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் சு. நாகூரான் நிதி அறிக்கை தாக்கல் செய்தார்.
    செயற்குழு உறுப்பினர் வினோத் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்ட சிறப்புத் தலைவர் சு. தியாகராஜன், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அரசு. தாயுமானவன், மாவட்டத் தலைவர் கு. வேதரத்தினம், மாவட்டச் செயலாளர் ஆர். தாமோதரன், பொருளாளர் ம. சண்முகம் உள்ளிட்டோர் கோரிக்கை குறித்துப் பேசினர்.
    தீர்மானங்கள்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மேலும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த எழுத்தாளர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சண்முகம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai