Enable Javscript for better performance
குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது

    By DIN  |   Published on : 10th April 2018 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணை அறிவிப்புப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீஸார் கைது செய்தனர். 
    அரசாணை அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 9,234 வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வு பெறும் பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகியவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 60 பேரை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு வரை யாரையும் போலீஸார் விடுவிக்கவில்லை. 
    இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறியது: எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். ஒருவேளை எங்களை விடுவித்தால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று இரவிலும் போராட்டத்தை தொடருவோம் என்றனர். போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai