Enable Javscript for better performance
கூத்தாநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு 45 பேர் வேட்பு மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு 45 பேர் வேட்பு மனு தாக்கல்

    By DIN  |   Published on : 10th April 2018 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகளுக்கான பதவிகளுக்கு திங்கள்கிழமை 45 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 45 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    இயக்குநர் பதவிக்கு அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விவசாய சங்கம் உள்ளிட்டோர் ஒரே அணியிலும், டிடிவி. தினகரன் அணியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனியாகவும், திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி ஒரே அணியாகவும், தேமுதிக  தனியாகவும் போட்டியிடுகின்றன.
    அதிமுகவில், முன்னாள் நகரச் செயலர் டி.எம். பஷீர் அகம்மது, நகரச் செயலர் எல்.எம். முகம்மது அஷ்ரப், ஜெயமணி, ஆர். மாரியப்பன், பைரோஸ் பேகம், டி. மகாலெட்சுமி உள்ளிட்ட 6 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. தவபாண்டியன், கே. பேபி, கே. அன்பழகன் என  3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கே.டி.எம். நூர்முகம்மது, விவசாய சங்கத்தைச் சேர்ந்த கே.ஏ. காஜா  மைதீன் உள்ளிட்ட 15 பேர்,  தேர்தல் அதிகாரி எஸ். வெற்றிவேலிடம்  வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    திமுக கூட்டணியில், திமுக நகரச் செயலர் எஸ்.எம். காதர் உசேன், நகரப் பொருளாளர் ஏ.ஏ. அமீர்தீன், பி. முருகேசு, எஸ்.எம். மணிகண்டன், ஹைஜா நாச்சியார், விஜயா சேகர்,  சி. கஸ்தூரி, கே. சிவானந்தம், என். ராஜகோபால் என 9 பேர், காங்கிரஸ் கட்சியில் கே.வி. மதியழகன், மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலர் எஸ்.எம்.டீ. ரஹமத்துல்லாஹ் உள்ளிட்ட 13 பேர் தேர்தல் அதிகாரி எஸ். வெற்றிவேலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கட்சி சார்பில் நகரச் செயலர் டீ.எம். சின்ன அமீன், கே.ஆர்.ஏ.எஸ். கிராஸ் மைதீன், கே.எம். ஜக்ரியா, சின்ன அக்பர்அலி, என்.எம். முகம்மது சித்திக், அப்துல் சலாம், ஆயிஷாபானு, தெய்வநாயகி, கே. காமராஜ், என். குமாரவேலு, கே. ரசாக் உள்ளிட்ட 11 பேரும், தேர்தல்  அதிகாரி எஸ். வெற்றிவேலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 11 இயக்குநர் பதவிகளுக்கு 61 மனுக்கள் வழங்கியதில், 45 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai