Enable Javscript for better performance
கூரை வீடுகள் தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டை அருகேயுள்ள வடசங்கேந்தி ஏரிக்கரை பகுதியில் இரண்டு கூரை வீடுகள் மற்றும் வைக்கோல் போர் போர் தீக்கிரையானது. 
    வடசங்கேந்தியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூபேஷ் (35). திங்கள்கிழமை வயல் வேலைக்கு சென்றிருந்தார். இவரது இரு குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். இவரது மனைவி பரிமளா(30)  சமையல் செய்ய அடுப்பு பற்றவைத்தபோது தீ கூரையில் பட்டு எரியத் தொடங்கியது. காற்று வீசிக்கொண்டிருந்ததால் தீ அருகில் பரவி மற்றொரு கூரை வீடு மற்றும் வைக்கோல் போர் எரிந்து சேதடைந்தது. தகவலறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீ மேலும் பரவால் தடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் தீயை அணைந்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த உபயோகப் பொருள்கள் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai