Enable Javscript for better performance
திருராமேஸ்வரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திறக்கக் கோரி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருராமேஸ்வரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திறக்கக் கோரி போராட்டம்

    By DIN  |   Published on : 10th April 2018 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியனர் திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சி. மாரியப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆர். வீரமணி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். சதாசிவம், மன்னார்குடி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பி. பாஸ்கரவள்ளி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
    இப்போராட்டம் குறித்து, ஒன்றியச் செயலாளர் ஆர். வீரமணி கூறியது: கடந்த ஒரு வாரமாக பூட்டிக் கிடக்கும் திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை திறந்து பணியைத் தொடரவும், அங்காடிகளைத் திறந்து , அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும், சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் நடவடிக்கைகளைப் பற்றி, திமுக சார்பில் வெளியிட்டுள்ள துண்டறிக்கை தவறானது என விளக்கியும் இப்போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்  திரளாக கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் திறக்கப்பட்டு, அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai