Enable Javscript for better performance
பூவனூர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் வட்டம், பூவனூர் சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோயில், கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
    வருகிறார். 
    சிறப்புமிக்க இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்தில் மகாதீபாரானை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai