Enable Javscript for better performance
மன்னார்குடியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

    By DIN  |   Published on : 10th April 2018 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவரை கைது செய்த காவல்துறையைக் கண்டித்து, மன்னார்குடியில் வழக்குரைஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். 
    மன்னார்குடி வழக்குரைஞர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், சங்க கட்டடத்தில் துணைத் தலைவர் ஜெ. நாகையன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மன்னார்குடி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர். சரவணச்செல்வன் மீது, அரசியல் கட்சியின் தூண்டுதலால், காவல்துறையினர் பொய் வழக்குப்பதிந்து கைது செய்திருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    மேலும், இந்த வழக்கை ரத்து செய்து, சரவணச்செல்வனை விடுதலை செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது. குற்றவியல் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே, காவல்துறையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஏப். 10) ஆர்ப்பாட்டம் நடத்துவது.
    இப்பிரச்னை தொடர்பாக, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிப்பது.
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன்னார்குடியில் மூத்த வழக்குரைஞர் எஸ். ராமகிருஷ்ணன், வழக்குரைஞர் பாலகுமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என தெரிந்தும், அவர்களை கைது செய்யாமல் காலதாமதம் செய்யும் காவல்துறையை கண்டிப்பதுடன், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கை தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     கூட்டத்தில் சங்க செயலர் த. இலக்கியதாசன், பொருளாளர் கே.சிவசுந்தர், மூத்த வழக்குரைஞர்கள் பா. தமிழரசன், கை. கலைவாணன், துரை. வீரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai