Enable Javscript for better performance
மாவட்ட நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்கள் வட்டக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்தில், மைய நூலக வளர்ச்சியை கருத்தில் கொண்டு வாசகர் வட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக குரு. சந்திரசேகரன், துணைத் தலைவராக சத்திரியன், செயலராக ரா. ஆண்டாள், ஒருங்கிணைப்பாளராக மகேந்திரன் மற்றும் 13 செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நூலக அலுவலரின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், மறைந்த வாசகர் வட்ட முன்னாள் தலைவர் ராஜநீதிதாசனுக்கு புலவர் கோமல். தமிழமுதன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நூலகர் மா. ஆசைத்தம்பி, தமிழ்க்காவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai