Enable Javscript for better performance
முன்விரோதத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முன்விரோதத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

    By DIN  |   Published on : 10th April 2018 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதுதொடர்பாக மற்றொருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    கெழுவத்தூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பூபேஷ் (26). அதே பகுதி காலனித் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ் (28). இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்ததாம்.
    இந்நிலையில், தாஸ் என்பவரது வீட்டில் ஏப். 7-ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு பூபேஷ், சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சென்றிருந்தனர். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் தகராறை தடுத்து இருவரையும் தனித்தனியாக அனுப்பிவைத்தனராம்.
    இந்த சம்பவத்தால் ஆத்திரத்தில் இருந்துவந்த சுபாஷ்சந்திரபோஸ்,  அன்றிரவு தென்பரை பாலத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பூபேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் காயமடைந்த பூபேஷ் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து,பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சுபாஷ் சந்திர போஸை  ஞாயிற்றுக்கிழமை இரவு (ஏப்8) கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai