Enable Javscript for better performance
அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகப் பிரியர் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உலக புத்தகத் தினத்தையொட்டி, புத்தப் பிரியர் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.
    மன்னார்குடியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
     நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு,  அதன் மாவட்டத் தலைவர் த.பெருமாள்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் கலந்துகொண்டார்.
     தீர்மானங்கள்: ஏப்.23-ஆம் தேதி, உலக புத்தகத் தினத்தையொட்டி, மாவட்டம் முழுதும் உள்ள கிராமங்களுக்கு புத்தகங்களை கொண்டு சேர்ப்பது, ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நூலகம் அமைக்க வலியுறுத்துவது, இதற்காக ரூ.5 ஆயிரம் செலுத்தி, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வகையில், புத்தகப் பிரியர் திட்டத்தை தொடங்குவது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டச் செயலர் யு.எஸ். பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் ப. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai